அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பான கல்முனை நற்பிட்டிமுனை எல்லையில் அமைந்துள்ள பகுதியில் வீடு வீடாக குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்பின் பேரில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கல்முனை சுற்று சூழல் பாதுகாப்பு காவல்துறையினர் கடற்படையினரும் இணைந்து வியாழக்கிழமை(9) வெள்ளிக்கிழமை(10) ஆகிய இரு தினங்களாக முற்பகல் முதல் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை குறித்த கிராமத்திலுள்ள வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் இவ் வேலைத்திட்டத்தை நற்பிட்டிமுனை சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பித்துள்ளதுடன் நற்பிட்டிமுனை பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறையினர் மக்களை தெளிவுபடுத்தினர்.