186
தெல்லிப்பளையில் உழவு இயந்திரத்தை புகையிரதம் மோதித் தள்ளியது. அதன் போது, உழவு இயந்திரத்தின் பெட்டி மட்டும் விபத்தில் சிக்கிக் கொண்டதால் சாரதி உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக ரயிலுடன் தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் ரயில்வே கடவை ஊடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டது.
Spread the love