176
முதலாவதாக கொரோனா வைரஸால் (Corona virus) பாதிக்கப்பட்ட சம்பவம் தமது நாட்டில் பதிவாகியுள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. சீனாவிலிருந்து கடந்த 15ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்ற ஒருவரே, கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் பரவிய குறித்த வைரஸினால் கிட்டத்தட்ட 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று காரணமாக, வட கொரியா தமது எல்லைப்பகுதியில் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Spread the love