முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் சொந்த பகுதிகளில் மீளக்குடியமர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு மிகப்பெரும் ஆபாத்தாக நிலக்கிழ் புதைக்கப்படிருந்த ஆபத்தை தரக்கூடிய பொருட்கள் விளங்கின. இவற்றை அகற்றி அழித்து மக்களை சொந்த நிலங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு பல சர்வதேச மனித நேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களும், பல உள்ளுர் மனித நேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களும் தங்களுடைய மனிநேயப்பணிகளை மேற்கொண்டன. இதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு ஏதுவாக பல மக்கள் வாழ்விடங்களை மக்களிடம் கையளித்தனர்.
அவ்வாறு மனிதநேயப்பணியை மேற்கொண்டு வரும் உள்ளுர் மனித நேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான சார்ப் (sharp) நிறுவனம் வடபகுதியில் தமது கண்ணிவெடி அகற்றும் செய்பாடுகள் மூலமாக 2016ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை 969670 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் ஆபத்தை தரக்கூடிய இருபத்தொராயிரத்து நூற்று எழுபத்து மூன்று (21173) வெடி பொருட்களை அகற்றி அழித்துள்ளதாக அதன் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வு பெற்ற கப்டன் பிரபாத் நாரம்பவை தெரவித்துள்ளார்.
குறிப்பாக வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் முகமாலை மற்றும் கிளாளி போன்ற பகுதிகளில் தங்களுடைய ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் மனிதநேயக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளை அண்மித்த கிராமங்களில் உள்ள இளைஞர் யுவதிகளை கொண்டு குறித்த மனித நேயப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.