164
ரஷ்யாவின் தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் 5 நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ளார். இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ரஷ்ய தரைப்படைகளின் தலைமை அதிகாரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளார். நாளை இடம்பெறவுள்ள சுதந்திர தின பேரணியிலும் அவர் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். லெக் செல்யுகொவ், தனது 45 வருட சேவைக்காலத்தில் 09 பதக்கங்களை பெற்ற சிரேஷ்ட அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love