155
சீனா வுஹான் நகரில் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 564 பேர் இறந்துள்ளதாகவும், 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நேற்று மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கபடுகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை பிரித்தானிய மருத்துவர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விலங்குகளில் பரீட்சாத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
Spread the love