மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப்பொருளில் இடம்பெறும், நூலக நிறுவன ஆவணப்படுத்தல், ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்த நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் 4.30 மணிவரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு மரபுரிமை பிரார்த்தனை மண்டப மேல்மாடியில் இடம்பெறவுள்ளன. சனிக்கிழ்மை காலை 10 மணிமுதல் 11.30மணி வரை ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறும்.
இதன்போது கண்காட்சித் தொடக்கமும், ஆவணப்படுத்தல்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெறும். பகல் 1.30 மணிமுதல் 3.30 மணிவரை கலந்துரையாடல் இடம்பெறும்; மறைந்த ஈழத்து ஆவணங்களை நோக்கி எனும் தொனிப்பொருளில் அந்தக் கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிமுதல் 3.30 மணிவரை மறைந்து செல்லும் மரபுரிமைகளை ஆவணப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெறும். குறித்த கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் அடங்கிய எங்கட புத்தகங்கள் விற்பனை நிலையமும் அமைந்திருக்கும். #மரபுரிமை #நூலக #ஆவணப்படுத்தல் #ஓலைச்சுவடிகள் #கண்காட்சி #கலந்துரையாடல்