ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இன்று (27) நடைபெறும் அமர்வின்போது இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது.
முன்னதாக, இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40 /1 ஆகிய பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக நேற்றைய அமர்வின்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.