194
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியயோரது வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கல்கிஸை நீதிமன்றம் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது #ரிஷாத் #மனைவி #வங்கிக்கணக்கு #உத்தரவு #சதொச
Spread the love