‘மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்
மானிட ஆன்மா மரணம் எய்தாது!.’
‘மானிட ஆன்மா மரணம் எய்தாது’
‘மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்!!’
கொன்றனர் கொன்றனர் கொன்று குவித்தனர்!.
மேனி மேனியாய்ப் போட்டுப் புதைத்தனர்.
வந்தனர்! வந்தனர்!
மீண்டும் மீண்டும் வந்தனர்! வந்தனர்!
வாழ்வு தேடி வழிகேட்டு எழுந்தவர், தேடி
எங்கும் எங்கெங்கும் வந்தனர்!
வந்தனர்! வந்தனர்!
மீண்டும் மீண்டும் வந்தனர்! வந்தனர்!
மறுபடி மறுபடி வாழ்வு கேட்டு
எழுந்த மனிதரை,
தேடித்தேடி மீண்டும் வந்தனர!;
காலம் நெடுகிலும், உலகம் எங்கிலும்
குவித்தனர்! குவித்தனர்! கொன்று குவித்தனர்!
‘மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்’
‘மானிட ஆன்மா மரணம் எய்தாது!’
சி.ஜெயசங்கர்.
‘மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்…
214
Spread the love
previous post