Home உலகம் சீனாவில் கொரோனா பாதிப்பு என சந்தேகிக்கப்படுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி -23பேரை காணவில்லை

சீனாவில் கொரோனா பாதிப்பு என சந்தேகிக்கப்படுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி -23பேரை காணவில்லை

by admin
In this photo released by Xinhua News Agency, rescuers search for victims at the site of a hotel collapse in Quanzhou, southeast China’s Fujian Province, Sunday, March 8, 2020. Several people were killed and others trapped in the collapse of the Chinese hotel that was being used to isolate people who had arrived from other parts of China hit hard by the coronavirus outbreak, authorities said Sunday. (Lin Shanchuan/Xinhua via AP)

சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த 5 மாடி விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விடுதியில் தங்கியிருந்த 71 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதனையடுத்து சம்பவ இடத்துக் சென்ற மீட்பு குழுவினர் 38 பேரை நீண்ட போராட்டங்களின் பின்னர்படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மற்ற 33 பேரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில்  இடிபாடுகளில் இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் காணாமல் போயுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #சீனா  #கொரோனா #பாதிப்பு  #விடுதி #காணவில்லை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More