உலகெங்கும்; அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதுடன் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தநிலையிலேயே அவுஸ்திரேலியா இவ்வாறு முடிவெடுத்துள்ளது.
இதற்கான உத்தரவை நேற்று சனிக்கிழii நள்ளிரவு பிறப்பித்த பிரதமர் ஸ்கொட் மாரிசன், எமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்பெயின் நாட்டுப்பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ்சின் மனைவி மரியா பெகோனா கோமெஸ் பெர்னான்டஸ் (45) கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவருவதனால் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #அவுஸ்திரேலியா #தனிமைப்படுத்த #தீர்மானம் #ஸ்பெயின் #மனைவி #கொரோனா