Home இலங்கை பாடுமீன் புத்தக திருவிழாவும் எனதுஅனுபவமும்- சி.ஜெயபிரதாப்….

பாடுமீன் புத்தக திருவிழாவும் எனதுஅனுபவமும்- சி.ஜெயபிரதாப்….

by admin

‘எம்மிடம் வாசிப்புபழக்கம் குறைந்துவிட்டதா?’இதற்கானபதில் கலந்துரையாடப்படவேண்டியதேதவிரஎழுந்தமானமாக’ஆம் குறைந்துவிட்டது”இல்லை இல்லை கூடி விட்டது’என்றபதில்களைக் கூறி முடிக்கமுடியாது. அதன் அடிப்படையிலேஎம்மைநாமேகேள்விகேட்டுக் கொள்வதற்கானசந்தர்ப்பங்களை இவ்வாறானபுத்தகதிருவிழாக்கள் சிறுபங்கேனும் வகிக்கின்றனஎன்பதுநிதர்சனம்.

எனக்கோபுத்தகங்கள் மீதுதீராக் காதலுண்டுபுதியபுத்தகங்களைதேடிச் சேர்ப்பதில் எனக்குள்ளஆர்வம் அவற்றைவாசிப்பதில் சற்றுக் குறைவென்றாலும் பெரும் பாலானஎனதுஓய்வுநேரங்களைபலபுத்தகபக்கங்களேஆண்டுகொள்ளும். எனதுபுத்தகவாசிப்பின் தொடக்கமானதுபின்வரும் பின்னணியினைக் கொண்டதுஎனலாம். பாடப்புத்தகங்களுக்குள் தொலைந்துபோகின்றஎன் சிறுபராயமானதுகவிதைகள் எழுதபுதியசொற்களைதேடித் புறப்பட்டபோதேபுதியபுதியபுத்தகங்களைதேடித் படிக்கஆரம்பித்தது. அதனூடேபாடப்புத்தகங்கள் மட்டுமின்றிபல்வேறுபுத்தகங்களைதேடிப் படித்ததும் அச் சொற்களைக் கொண்டுபல்வேறுகவிதைகளைஎழுதவும் முடிந்ததுஎன்பதுஉண்மை.

இன்றையசூழலில் புத்தகவாசிப்புக்களுக்குஅதிகமுன்னுரிமைவழங்கப்படுகின்றது. வாசிப்புகளின் முக்கியங்கள் பலர் மத்தியிலும் உணர்த்தப்படும் பலநடவடிக்கைகள் எம்மிடையேமுன்னெடுக்கப்படுவதனைஎம்மால் காணமுடிகின்றது. இங்குஎன்னுடையகேள்வியானதுபுத்தகவாசிப்புக்கள் மட்டும் தானாவாசிப்புஎன்பதே? புத்தகவாசிப்புக்களைக் கடந்தஅறிவினையும் ஆற்றல்களையும் அனுபவவாசிப்புக்கள் தந்துவிடுகின்றன. இதன் படியாக இவ் புத்தகவிழாவில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் இருபதுவருடகாலபயணத்தில் வெளியிடப்பட்டபதிப்புக்கள் அடங்கியகாட்சிக் கூடத்தில் இரு தினங்களைகழித்தஎன் அனுபவவாசிப்பானதுமுற்றிலும் வேறுபட்டஅறிவுசார் விருத்தியினைஅளித்ததுஎனலாம்.

புத்தகவாசிப்புக்களில் இருந்துஎன் அனுபவவாசிப்புக்கள் முற்றிலும் வேறுபட்டவை. நகரத்திலிருந்துதொலைவில் கிராமத்தில் பிறந்துஎன் சிறுவயதைக் கழித்ததால் அதுமிகவும் வித்தியாசமானஅனுபவங்களைகொண்டிருந்தது. குளங்களில் குளித்து,குட்டைகளில் மீன்பிடித்து,கடற்கரைகளில் ஓடிவிளையாடி,கம்புகள் ஓலைகள் பிறக்கிவெட்டைக் காடுகளில் வீடுகட்டிவிளையாடியஅனுபவவாசிப்புக்கள் என்றுமேவீண்போனதில்லை. ஒப்பீட்டளவில் புத்தகவாசிப்புமட்டும் கொண்டோர் மத்தியில் இவ்வாறானஅனுபவவாசிப்புக்கள் மட்டும் கொண்டோர் எந்தவிதத்திலும் குறைந்தவர்களோ,தாழ்ந்தவர்களோகிடையாது. இருந்தும் இவ்வாறானசூழலில் புத்தகவாசிப்புக்கள் தேவையற்றவைநடைமுறைக்குபொருத்தமற்றவைஎனஒதுக்குதல் ஆனதுசிறந்ததெரிவாகஅமையாது. புத்தகவாசிப்புக்களுக்குநாம் இன்றுகொடுக்கின்றமுன்னுரிமையுடன் அனுபவவாசிப்பும் அவசியமாகின்றதுஎன்பதேஎனதுகருத்து.

மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் வெளியீடுகள் ஆனவைஅனுபவவாசிப்புக்களின் ஒருபதிவேடுகளாகவேஅமைந்திருந்தன.இன்றையசூழலில் புத்தகங்கள் என்றவுடன் அயல் நாடுகளில் பெயர் தெரிந்தஎழுத்தாளர்கள்,பிரசித்திபெற்றபதிப்பகங்கள் மற்றும் புகழ்பெற்றபெயர் கொண்டபுத்தகங்களைதேடுகின்றஎம்மவர்களின் மனநிலைமுன்புஎம் உள்ளூர் அறிவு,திறன்,ஆளுமைகளைஎவ்வாறுபார்க்கின்றனர் என்பதனைவாசிக்கமுடிந்தது.

அனுபவவாசிப்புக்களில் என்றுமேமுக்கிய இடம் வகிப்பவை இயற்கையையும் சூழலினையும் வாசிப்பதே. உறக்கத்தில் கூட சுவாசித்தலானது இயற்கைவாசிப்பின் ஓர் அங்கம் எனலாம். இதையும் தாண்டிசூழலைவாசித்தலானதுநாம் எவ்வாறுவாழ்ந்தோம்,எவ்வாறுவாழ்கின்றோம்,எவ்வாறுவாழபோகின்றோம் என்பதற்கானஅடிப்படைகளாகஅமையும். பல்வேறுகட்டங்களில் பல்வேறுமனிதர்களுடன் வாழ்கின்றோம் அவ்வாறானநிலைமைகளில் பலரிடம் பலவிடயங்கள் கற்கின்றோம். உதாரணமாகபாட்டியிடம் கதைகேட்டல்,தந்தையிடம் தொழில் கற்றல் எனமனிதர்களைஅனுபத்தின் ஊடாகவாசித்தலானதுநீண்டுகொண்டேபோக இன்றையசூழலில் இவ் வாசிப்பின் நிலைபற்றியஆழ்ந்தசிந்தனைஅவசியமாகின்றது. அதனையும் கடந்துநாம் இயற்கையை இன்னும் பலவழிகளில் வாசித்துக் கொண்டேதான் இருக்கின்றோம். கண்களை மூடினால் குருவிகள்,காகங்கள்,நாய்கள்,மாடுகள் எனபல இயற்கைப் பிராணிகளின் ஓசைகளைக் கேட்டலும்,மகிழ்தலும் ஒருவிதவாசிப்பேஅதனையும் கடந்துகாற்றுக்கள் வீசுகின்றதிசைகொண்டுகாலநிலைஅறிதல்,எறும்புகளின் நடத்தைகளைக் கொண்டே இயற்கையையேஎதிர்வு கூறுதல் ஆனதுஎன்றுமே இயற்கைவாசிப்பின் முக்கிய இடம் வகிக்கின்றன.

இவ்வாறான இயற்கையும் சூழலும் பற்றிபேசுகின்றபலபுத்தகங்களை மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் காட்சிக் கூடத்தில் காணக்கிடைத்தது. இயற்கையுடன் இணைந்துசிறுவர்கள் படைத்தபடைப்புக்களின் புகைப்படதபால் அட்டைகள் சூழல் வாசிப்புக்கள் சார்ந்து மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளின் நினைவுகளின் ஆவணக்களாகஅமைந்திருந்தன. அதனோடுவண்ணமாதல் கையேடானதுசூழலில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டுசிறுவர்கள் செய்தகலையாக்கங்களின் புகைப்படங்களின் தொகுப்பாகஅமைந்திருந்தது. அவற்றின் மூலமாகசிறுவர்கள் சூழலினைஎத்தனையோவேறுபட்டவடிவங்களில் வாசித்திருந்தஅனுபவங்களை அவ் வண்ணமாதல் புத்தகம் எமக்குஉணர்த்தியது.

அதனோடுபாரம்பரியகலையான கூத்துகள் பற்றிபேசுவதானபலபுத்தகபதிப்புக்களை மூன்றாவதுகண் காட்சி கூடத்தில் காணக் கிடைத்து. பாரம் பாரியகலைகள் நிகழ்கின்ற இடமானதுதிறந்த நூலகம் போன்றதே,பல்வேறுஅனுபவவாசிப்புக்களுக்கானஅடித்தளம் அவ்விடமாகும். அவற்றின் பலஅனுபவபகிர்வுகளும் புத்தகவடிவம் பெற்றிருந்தன. கூத்துகள் நடக்கின்ற இடத்தில் அவ் அனுபவங்களை வாசிப்பதோடு அவற்றை ஆவணக்களாக்குதலானது எதிர்காலத்திற்கு என்றுமேஅவசியமாகும். வேறுபட்டசந்தர்ப்பம்,வேறுபட்டகலைஞர்களின் பல்வேறுபட்டஅனுபவவாசிப்புகள் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. இவ்வாறானசூழலில் எம்மவர்களின் அனுபவங்கள் எம்மிடையேபகிரப்படுதல் அவசியமாகின்றது. இவ்வாறானஅனுபவங்களை மூன்றாவதுகண் நண்பர்கள் குழு கையேடுவடிவில் பலருடனும் பகிர்ந்திருந்தது.

அதனோடுசூரியாபெண்கள் அபிவிருத்திகுழுவும் அவர்களதுதொடர்ச்சியானபயணத்தில் பல்வேறுகட்டங்களில் வெளியீடுசெய்யப்பட்டபலபுத்தகங்களைகாட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தது. அப் புத்தகங்களில் எத்தனையோதிறமையானஎமதுஎழுத்தாளர்களின் எழுத்துகளைகொண்டமைந்திருந்தன. பெண்ணியம் பேசுகின்றபலகவிதை,கட்டுரைகள்,சம்பவங்கள் எனபல்வேறுவிடயங்களினைவாசிப்புகளாகவைத்திருந்தனர் அவர்கள்.

பலபுத்தகங்களின் காட்சியும் விற்பனையும் எனகளைகட்டிய இப் புத்தகதிருவிழாவானதுபுத்தகஅறிமுகஉரை,வீதிநாடகங்கள்,குறுந்திரைப்படங்கள்,ஆவணப்படங்கள் திரையிடல் இரண்டுதினக் கொண்டாட்டமாகஅமைந்தது. அங்கேபலபுத்தகங்களைத் தேடிபலரும் வந்திருந்தனர். ஆயினும் வந்தவர்களோவாசித்துவாங்குதல் தவிர்த்துவரும் போதேபெயர்களைமனதில் வைத்துக் கொண்டேவாங்கவந்திருந்தனர் பெரும்பான்மையானோர் என்பதுஎனதுதனிப்பட்டவாசிப்பு.

நான் வெளியிலேவெறுமனேஒருபார்வையாளனாககலந்துகொண்டதையும் தாண்டி மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவின் இருபதுவருடபயணத்தில் பல்வேறுகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டபதிப்புக்களைகாட்சிப் படுத்தலும் விற்பனைசெய்தலும் (இதனுள் இலவசமாகசிலபிரதிகளைவழங்குதலும் அடங்கும்) காட்சிக் கூடத்தின் மூலமாகபங்குபற்றியஎனதுஅனுபவவாசிப்பானதுமிகபெறுமதிமிக்கதாகவேஅமைந்தது.

சி.ஜெயபிரதாப்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More