140
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் போட்டி, சென்.ஜோன்ஸ் அணியின் வெற்றியுடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 18 ஆவது வருட ஒருநாள் போட்டி 14.03.2020 அன்று சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது,
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 36.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தனுஜன் 14, டினோசன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக, இயலரசன், நிதுசன் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
95 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலளித்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 25.1 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்குச் சகல விக்கெடக்ளையும் இழந்தது. ராஜ்கிளின்டன் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ஏ.அபிசேக் 5 விக்கெட்களையும், டினோசன், விதுசன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக அபிசேக் தெரிவு செய்யப்பட்டார். #ஒருநாள்போட்டி #சென்.ஜோன்ஸ் #மத்தியகல்லூரி
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love