(க.கிஷாந்தன்)
‘கொவிட் – 19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் நகரில் (17.03.2020) அன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி ஹட்டன், டிக்கோயா நகரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பிரதான பஸ்தரிப்பு நிலையங்கள், வீதியின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், பிரதான வீதிகள், நடைபாதைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஹட்டன் நகரசைபயின் சுகாதார பிரிவே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. #கொரோனா #ஹட்டன் #கிருமிநாசினி #கிருமிஒழிப்பு