202
கொரோனா வைரஸ் தொற்றல் பாரிய பிரச்சனையாக உருவெடுத்து வருவதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் வாடியா குழுமத்தின் (wadia group) ‘கோ ஏயர்’ GOAIR விமான சேவை நிறுவனம் தனது சர்வதேச விமான சேவையை மார்ச் 17 முதல் ஏப்ரல் 15 வரை முற்றிலும் நிறுத்திவைத்துள்ளது.
பல நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணங்கள் உலகம் முழுவதும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகிஉள்ளது. #கொரோனா #சர்வதேச #விமானசேவை #கோஏயர் #பயணிகள்
Spread the love