217
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா. நந்தகுமார் அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமது கண்டனத்தைத் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
நாட்டில் இன்று நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையில் கூட அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் பணியாற்றும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் அனுசரணையாக செயற்பட வேண்டிய நிலையில் இவ்வாறு நடந்தது மனம் வருந்தத்தக்கது. இவ்வாறான அடாவடிகள் எமது இயங்கு திறனைக் குறைத்து நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பலவீனமாக்கலாம். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு காவல்துறை திணைக்களத்தைக் கோரியுள்ளதுடன் நெருக்கமாக அவதானித்தும் வருகின்றோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #கொரோனா #நந்தகுமார் #கண்டனம் #வடமாகாண #சுகாதாரசேவைகள்பணிப்பாளர்
Spread the love