Home இலங்கையாழ் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேகத்தின் பேரில் சிறீதரன் அனுமதி….

யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேகத்தின் பேரில் சிறீதரன் அனுமதி….

by admin

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கோரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோ காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவருக்கு கோரானா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுவைக்கப்பட்டார். “அவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவருக்கு உரிய முதலாம் கட்ட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது அதன் பின்னரே அவருக்கு கோரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More