160
மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டில் திருட்டில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் யாழ்.காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் பொன்னையா ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிறுக்கிழமை புகுந்த திருடர்கள் 45,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினி, அலைபேசி என்பவற்றை திருடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ். காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார் #திருட்டு #சந்தேகநபர் #கைது #மானிப்பாய்
Spread the love