கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் லண்டனில் 40 நிலக்கீழ் புகையிரத சேவைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றன. இன்று காலை பல புகையிரத நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் வோட்டலூ மற்றும் சிற்றி லைன் புகையிரத சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது , அத்துடன் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுநேர நிலக்கீழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
போக்குவரத்துச் சேவைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை லண்டன் போக்குவரத்துப்பிரிவு அறிவித்திருந்த நிலையில் நிலக்கீழ் புகையிரத சேவைகள் , நிலத்திற்கு மேலான புகையிரத சேவைகள், ரி.எப்.எல் , டி.எல்.ஆர் மற்றும் ட்ராம் சேவைகள் அனைத்தும் குறைக்கப்படவுள்ளன.
இதேவேளை அத்தியாவசியப் பயணங்களுக்காக இரவு நேர பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லண்டன் மக்கள் அவசியமில்லாத சமூகத் தொடர்புகளைத் அதாவது போக்குவரத்து வலையமைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசியப் பயணங்களுக்கு மட்டுமே பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு லண்டன் வாழ் மக்களை கேட்டுக்கொள்வதாகவும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூடப்படும் புகையிரத நிலையங்கள் கீழேவருமாறு
Bakerloo line: Lambeth North, Regents Park, Warwick Avenue, Kilburn Park and Charing Cross.
Central line: Holland Park, Queensway, Lancaster Gate, Chancery Lane and Redbridge
Jubilee line: Swiss Cottage, St John’s Wood, Bermondsey and Southwark
District line: Bow Road, Stepney Green, Mansion House, Temple, St James’s Park and Gloucester Road
Circle line: Bayswater, Great Portland Street and Barbican
Northern line: Tuffnell Park, Chalk Farm, Mornington Crescent, Goodge Street, Borough, Clapham South, Tooting Bec, South Wimbledon and Hampstead ,
Piccadilly line: Caledonian Road ,Arsenal .Covent Garden ,Hyde Park Corner .Bounds Green ,Manor House
Victoria line: Pimlico , Blackhorse Road
#கொரோனா #நிலக்கீழ்புகையிரதசேவைகள் #லண்டன்