Home உலகம் கொரோனா பலி எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரிப்பு

கொரோனா பலி எண்ணிக்கை சீனாவை விட இத்தாலியில் அதிகரிப்பு

by admin

கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவில் இதுவரை 80,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 3,245 பேர் உயிரிழந்திருந்தனர்.

இத்தாலியில் இதுவரை 41,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,405 ஆகியுள்ளது.  இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் சீனாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதுடன்இறப்பு விகிதமும் அங்கு அதிக அளவில் உள்ளது.

அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 475 பேர், இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், கடந்த மார்ச் 12 முதல், முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ´வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்தத் தடை உத்தரவு, மேலும் நீடிக்கப்படும் என, பிரதமர், குயுசிபே கான்டே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #கொரோனா  #சீனா  #இத்தாலி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More