Home இலங்கை போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

போலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

by admin

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமூக ஊடகங்களிடம் வேண்டிக்கொள்கிறார்.

கோவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் தொடர்பாக போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுவதன் காரணமாக பிரதம அமைச்சர மஹிந்த ராஜபக்ஷ  இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவது உட்பட பிரதம அமைச்சர் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வேண்டுமென்றே போலியான முறையில் சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

நிதியாற்றல் உள்ள, இல்லாத அனைவரும் கொரோனா அனர்த்தம் காரணமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் தேவைகளுக்காக கீழ்தரமான முறையில் இவ்வாறான போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவதனைக் கண்டிப்பதாகவும் பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறு போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவது தொடர்பாக பிரதம அமைச்சரின் சட்டத்தரணிகள் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இன்று (2020.03.25) முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்தனர்.

கட்சி, நிற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் போலியான தகவல்களை சமூகமயப்படுத்தி அரசாங்கத்தின் முயற்சியை குறைகூறுவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உதவி வழங்குமாறு அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களிடமும் வேண்டிக்கொள்கிறது.   #நிவாரணங்கள்  #போலியான #பிரச்சாரங்களை   #சட்டரீதியான

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More