கோவிட்-19 களநிலை அறிக்கை – இலங்கை – 24 பங்குனி 2020 (மாலை 4 மணி)
1. கோவிட்-19 நோயானது எமது நாடு முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது. இந் நோய்ப் பரவலைத் தடுக்கும் மற்றும் தணிக்கும் முயற்சிகளை நாம் அனைவரும் கட் டாயமாக
பின்பற்றல் வேண்டும்.
2. இன்றைய நிலைப்படி, 99 (101-2) நோயாளிகள் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 நோயாளிகள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 நோயாளிகள் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
3. இந் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் பத்தொன்பதாயிரம் (19,000) பேர் சுகாதார, இராணுவ மற்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
4. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புலமைசார் பிரேரணைக்கு அமைய ஜனாதிபதி விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மூடியுள்ளார், இதன் மூலம் தனிநபர்களின் நுழைவு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.
5. இப்போது நாம் அனைவரும் பொறுப்பாக செயற்பட்டு நோயுற்றவர்களையும் அவர்களின் தொடர்புகளையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் இந்நோயை மேலும் பரவுவதிலிருந்து கட்டுப்படுத்த முடியும்.
6. கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்று தனித்துவமான படிமுறை வழிகள் உள்ளன:
a) முதன்மை தடுப்பு: தனி நபர்களை கிருமித் தொற்றில் இருந்து பாதுகாத்தல்
b) இரண்டாம் நிலை தடுப்பு: நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தல்.
c) மூன்றாம் நிலை தடுப்பு: தீவிர நோய் நிலையை அடைந்தவர்களை பராமரித்தலும் மரணங்களைத் தடுத்தலும்.
7. கோவிட்-19 நோயானது நான்கு நிலைகளைக் கொண்டதாக உலக சுகாதார அமைப்பு
(WHO) விளக்கியுள்ளது:
i. தொற்று இல்லாத நிலை
ii. எழுந்தமான ((sporadic) தொற்றுக்கள்
iii. கூட்டமாக தொற்று நிலை (Clusters)
a) வீடுகளுக்குள் தொற்று நிலை (Home Clusters)ழூ
b) சிறிய குழுக்கள் கொண்ட கூட்டுநிலை.(உதாரணமாக கிராம கூட்டு நிலை ( Village Clusters)
iv. சமுதாயத்தினுள் பரவலான தொற்று நிலை.
* இலங்கை இப்போது மூன்றாம் iii(a) கட்டத்தில் உள்ளது.
8. தற்போது, ,இலங்கை மூன்றாம் iii(a) கட்டத்தை அடைந்துள்ளது , எனினும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் , நிலை iii(b) அல்லது நிலை iv க்குச் செல்லக்கூடிய ஆபத்து உள்ளது.
9. இலங்கையில்; முதல் கோவிட்-19 தொற்றானது 11.03.2020 அன்று அடையாளம் காணப்பட்டது, எனவே இன்றைய தினமானது (24.03.2020) 14-வது நாள் என வரையறுக்கப்படுகிறது.
10. இன்று இரண்டு வகையான கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர்
a) உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் (PCR பரிசோதனை மூலம்)
b) உண்மையான நோயாளிகள் (சரியான எண்ணிக்கையான நோயாளிகள்) அதாவது
மருத்துவ ரீதியில் கண்டறியபடாத, சமுதாயத்தில் உள்ள நோயாளர்கள்.
11. தற்போது (14ஆம் நாள்), மொத்தம் 101 நோயாளிகள் PCR முலம் தொற்றுக்கு
உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்- 10(a) (உறுதிப்படுததப்பட்ட மொத்த
எண்ணிக்கையான நோயாளர்கள்-101).
12. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையால் வெளியிடப்பட்ட சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தற்போது சமுதாயத்தில் உள்ள உண்மையான தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
13. உறுதிப்படுத்தப்பட்ட (101) தொற்றுக்குள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து விமான நிலையத்திலிருந்து நேரடியாகத் தனிமைப்படுத்தப் பட்டவர்கள். ஏனைய 69 பேர் எமது சமுதாயத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டவர்கள். எனவே, மேற்படி கருத்தின் படி எமது சமூகத்தில் சுமார் 550 உண்மையான தொற்று நோயாளர்கள கண்டறியப்படாமல் மக்களிடையே உள்ளனர். இந்த 550 பேரில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அல்லது வீட்டில் சுய தனிமைப்படுத்தலின் கீழ்
இருக்கலாம். (கணிப்பீடு: [(101-32) x 8 = 552]
14. இந்த 550 நோயாளிகளுக்கும் மொத்தம் 19,000 தொடர்புகள் இருக்கலாம்.
தொற்றுநோயியல் பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு, மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தற்போது இந்த தொடர்புகளைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
15. இந்த பெருந்தொகையான தொற்றுக்குள்ளானவர்கள் (19000) எனக் கருதப்படுவோர் தீவு முழுவதும் பரவியிருக்கலாம் என்பதால், இலங்கையானது ஆபத்தில் உள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
16. 15.03.2020 இலங்கைத் தீவுக்குள் மக்கள் சுதந்திரமாக நடமாடினர். (சமூக இடைவெளி ஏதும் இருக்கவில்லை)
17. அதைத் தொடர்ந்து, 16.03.2020 முதல் 19.03.2020 வரையான காலப்பகுதியில் விமான நிலையங்கள், பாடசாலைகள் மூடப்பட்டமை, மற்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமை போன்ற காரணிகளால் 50% சமூக இடைவெளி ஏற்பட்டது எனக் கருதலாம்.
18. 20.03.2020 முதல், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டமையால், 75% சமுக இடைவெளி ஏற்பட்டுள்ளது எனக் கருதலாம்.
19. சமூக இடைவெளி இல்லாமல் சுதந்திரமான மக்கள் நடமாட்டம் இருப்பின் ஒரு நபரால் 30 நாட்களுக்குள் 500 பேர் வரை தொற்றுக்குள்ளாகலாம். 50மூ சமூக இடைவெளி ஏற்படும் போது, 30 நாட்களுக்குள் ஒரு நபரால் சுமார் 15 பேரை மட்டுமே
தொற்றுக்குள்ளாக்கலாம். மேலும் இந்த சமூக இடைவெளி 75மூ அதிகரிக்கப்படும் போது 30 நாட்களுக்குள் ஒரு நபரால் 2.5 நபர்களை மட்டுமே தொற்றுக்குள்ளாக்க முடியும்.
20. எனவே இங்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது, சமூக இடைவெளி கணிசமான அளவு பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
21. இதன் அடிப்படையில், பின்வரும் எதிர்வு கூறல்களை நாம் கூறலாம்:
a) சமூக இடைவெளியை முன்னெடுப்பதில் தோல்வியுற்ற மேற்கத்திய நாடுகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, 25.03.2020 இருந்து 07.04.2020 க்கு இடையான காலப்பகுதியில் சமூக இடைவெளியை மேற்கொள்ளாவிட்டால், இத் தொற்று விரைவாக அதிகரிப்புள்ளாகும். எனவே எமது நாட்டு மக்கள் வழங்;கப்பட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றினால் அடுத்த இரண்டு வாரங்களில்
சாதகமான விளைவு எமக்கு கிட்டும் என்று நாம் கருதலாம்.
b) பாதகமான விளைவுகள் ஏற்படும் போது
i. பௌதீக வளங்களின் திறன், அளவு மற்றும் தரத்தில் குறைபாடு ஏற்படலாம்
ii. பொது மக்கள் சுகாதார ஆலோசனைகள் சரியாகப் பின்பற்றாவிடத்து சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபடுவதால் அல்லது நோயுறுவதால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படக் கூடும். இதன் மூலம் சுகாதார சேவையில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டு நிலைமை மேலும் மோசமடையக் கூடும்
எனவே, இலங்கையர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் வாழ்க்கை முறைகளிலும் பின்வரும் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1. நிதி:- வங்கி நடவடிக்கைகளின் போது ,பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
2. உலர் உணவு விநியோகம்: தேசிய இடர் முகாமைத்துவப் பிரிவு மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பில் உலர் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சுகாதாரத் துறை, பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் உதவியுடன் விநியோகிக்க ஒரு பொறிமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. உற்பத்திப் பொருட்கள்: உற்பத்தி (உடனடி) பொருள்களின் விநியோகத்தை
உறுதிப்படுத்த மேலே பரிந்துரைக்கப்பட்டது போன்ற ஒரு பொறிமுறையை ஏற ;படுத்திக்கொள்ள வேண்டும்.
4. மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள்: தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நடமாடும் சேவை மூலம் வழங்கப்படலாம். இந்த நடவடிக்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த
சுகாதார அமைச்சானது , இலங்கை தொலைத தொடர்பு நிறுவனங்களுடன் இணைணந்து ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
5. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீகளுக்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளதால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கிய மேற்படி ஆலோசனைகளைப் பின்பற்றி ஆரோக்கியமாகவும் நோயற்றவர்களாகவும் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்