கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சேர 38,000 க்கும் மேற்பட்ட முன்னாள் சுகாதார வல்லுநர்கள் மற்றும் விரைவில் கல்வியை நிறைவு செய்யவுள்ள தகுதிவாய்ந்த மாணவர்களையும் NHS சேவையில் இணைக்க முடியும் என அரசாங்கம் கூறியுள்ளது.
“உங்களுடைய NHSக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” “Your NHS Needs You” என்ற ஆட்சேர்ப்பு கோரிக்கைகை்கு 15,266 முன்னாள் ஊழியர்கள் சாதகமான பதிலை அளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாரிய கொரோனா வைரஸ் நெருக்கடியின் அடிப்படையில் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாடுதழுவிய கைதட்டல்களில் பிரித்தானிய மக்கள் பங்கேற்ற பின்னர் இந்த “உணர்ச்சிபூர்வமான” நிகழ்வுக்கு NHS நன்றி தெரிவித்துள்ளது.
லண்டனில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 “சுனாமியை” சமாளிக்க, NHSன் தாதியர்களை இங்கிலாந்தின் பிற பகுதிகளிலிருந்து தலைநகருக்கு மாற்றும் நடவடிக்கைகளில் NHS ஈடுபட்டுள்ளது.
இதேவை மக்களை வீதிகளில் இருந்து அகற்றுவதற்கும், வணிகங்களை மூடுவதற்கும், குறித்த இடத்திலேயே அபராதம் விதிப்பதற்கும் காவல்துறைக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.