160
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினின் நிர்வாகத்தில் உள்ள பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கிரெம்ளின் மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.
67 வயதாகும் ஜனாதிபதி புதின், சாதாரணமாக வேலை செய்து வருவதாக, அவருடைய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இதெவேளை ரஸ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,036ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Spread the love