இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும், குணமடைந்த இருவரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 9 பேர் இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் , நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள 106 கொரோனா நோயாளர்களில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதில் 87 பேர் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலும், 9 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும், மின்னேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறனர்.
மேலும் 109 பேர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 300 பேர் வெளியேறியேறியதாக அறிவிப்பு….
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 300 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி சென்றதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.