139
மன்னார் மாவட்டத்தில் காவல்துறைஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வீதிகளில் சுற்றி நடமாடியவர்கள்,அனாவசிய தேவை இன்றி வீதிகளில் நடமாடியவர்கள்,வீதிகளில் கூடி நின்று கதைத்தவர்கள் என 47 பேர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #ஊரடங்கு #கைது
Spread the love