பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடுகளும் ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியானது உலகலாவிய ரீதியில் பெரும் வளர்ச்சியினை எட்டிசென்ற போதும் இன்று உள்ளூர் மருத்துவம்ரூபவ் கை மருத்துவம் , பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகைமருத்துவத்தின் தேவையினையும் மனிதர்கள் நாடி நிற்கின்றனர். நவீன அறிவியலாளர் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ முறையினை தரமானது , நம்பகத்தன்மையானது என கட்டமைத்தனர். காலனித்துவ கல்வி முறையின் ஊடாக மேற்கத்தய மருத்துவமானஆங்கில மருத்துவ முறை கொண்டு வரப்பட்டது. ‘மிசனரி கல்வி’ என்ற முறையின் ஊடாகஅறிவாற்றல்ரூபவ் விழிப்புணர்வு , சிந்தனை வளர்ச்சி எனும் காலனிய கொள்கையினை உள்ளூர் மக்கள் இடத்தில் பரப்பவும் மருத்துவத்தின் மூலம் தம் இலக்கினை நிறைவேற்றவும் வகையிலானசமூகத்தினை உருவாக்கினார்கள். இன்று மனிதரின் ஆரோக்கிய வாழ்க்கையினை கூட நுகரும்பொருளாக மாற்றியுள்ளனர்.
ஆனால் உள்ளூர் மருத்துவமானது உள்ளூர் அறிவு திறனுடன் காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் பரிசோதனையிலும் இருந்து வந்துள்ளது.பாரம்பரியம்ரூபவ் பண்பாடுரூபவ் வாழ்வியலுடனான உள்ளூர் மருத்துவம்ரூபவ் கை மருத்துவம் ,பாட்டிவைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியவற்றினை காலனித்துவ சிந்தனை ‘டுழஉயட’ தரமற்றவை , தரமற்ற மருத்துவம் , சாதி சமூக நிலை சார் மருத்துவம் என பாகுப்படுத்தி தரமிழக்கச் செய்துள்ளதோடு உள்ளூர் மருத்துவத்தினை வணிக நோக்காகவும் நுகர்வு பொருளாகவும் மாற்றியமைத்தது. இருந்தும் உள்ளூர் மருத்துவமானது மரபு ரீயாக ஒரு சந்ததியினரிடம் இருந்து கற்று அடுத்த சந்ததியினர் பார்த்து செயல்முறையாக கற்றுக் கொண்டு காலம் காலமாக வளர்ந்து வந்ததுடன் இன்று அனைவரையும் உள்ளூர் மருத்துவம் ,கை வைத்தியம்,பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவத்தினை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.
உலகில் எங்கே தொற்று நோயினால் இறந்துவிடுவோமோ? என்ற பயத்தில் உள்ளூர் மருத்துவத்தினை தேடி ஓடுகின்றோம். சிறிய காயத்திற்கு கூட ஆங்கில மருத்துவத்தில் தஞ்சமடைந்து கிடந்த மனிதர் தற்போது பெருங்காயம் , மஞ்சல் ,கொத்தமல்லி ,வேப்பம் இலை என மூலிகைகளைத் தேடி அலைகின்றனர். காலனிய ஆதிக்கத்தின் பின் மேற்கத்தைய நாடுகள் அறிமுகப்படுத்திய உணவே நாகரீகம் ஆடம்பரம் என எண்ணி இருந்தனர் ஆனால் இப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியினை வளர்த்துக்கொள்ள உள்ளூர் மருத்துவம் சார் உணவுகளையும் மூலிகை இலை வகையினையும் தேடி திரிந்து வாங்கி உண்ணுகின்றனர்.
வீட்டில் நிற்க நேரம் இல்லாத மனிதர் நின்று யோசிக்கின்றனர் உள்ளூர் மருத்துவம் ,கை மருத்துவம். பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் தேவையினையும் உணவுரூபவ் உபசரிப்பு மற்றும் பழக்கவழக்கத்துடனான நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையினையும் நோய் எதிர்ப்பு சக்தியினையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று.
நவீன மருத்துவத் துறையானது உலகினை மிஞ்சி வேற்று கிரகம் வரை சென்று கொண்டுருக்கின்ற போதும் இன்றும் எம் பெரியோர்கள் உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையின் அவசியத்தினையும் ஆரோக்கியமானது என அழியாது காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் வளர்த்து வந்துள்ளனர். உள்ளுர் மருத்துவம் இருந்ததினாலும் இப்பொழுது இருப்பதாலும் தேடி திரிகின்றோம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு. முற்காலத்தில் கூட்டாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்வு என்ற நிலை மாறி இன்று தனித்தும்ரூபவ் தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு தொற்றுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வீடுகளில் முடங்கி வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையினையும் கையாண்டு வந்த சமூகத்திடம் எந்த விதமான கொடிய வகையான நோய்களோ தொற்றுக்களோ தாக்கவில்லை. தாண்டி தாக்கிய போதும் எமது முன்னோர்கள் தாக்கத்திற்கு முகம் கொடுக்க உள்ளூர் மருத்துவ முறையினை கையாண்டுள்ளதோடு நோய்களினையும் குணப்படுத்தியுள்ளனர். பாரம்பரியமாக பின்பற்றி வரும் உள்ளூர் மருத்துவமானது இயற்கையுடனும் வாழ்வியலுடனும் இணைந்து காணப்பட்டதுடன் உணவு உபசரிப்பு மற்றும் பழக்கவழக்கத்துடன் உள்ளூர் மருத்துவ முறையானது அதிகம் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது. எனவே இன்று உள்ளூர் அறிவு திறன் ,உள்ளூர் மருத்துவம் என்பன ஆய்வுகளுக்கும் கற்கை முறைக்கும் மாத்திரமின்றி பிரயோகித்தல், கற்றல் நடைமுறையில் மீள் உருவாக்கப்பட்டு உள்ளூர் மருத்துவத்தில் பயன் அடைய வேண்டும். காலனிய நீக்க சிந்தனையுடன் கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் அறிவு பூர்வமான சிந்தனை செயல்பாடுகளுக்கு ஏற்ப உள்ளூர் மருத்துவம்ரூபவ் மூலிகை மருத்துவம் மற்றும் கை வைத்தியத்தினை கற்றல் கற்பித்தல் செயற்படுத்தல் என மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை அதிகம் உருவாகி வருகின்றது.
ச.புஸ்பலதா,
நுண்கலை சிறப்புக் கற்கை,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.