135
பிரித்தானிய மஹாராணி எலிசபெத் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. தனது அரச பொறுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ராணி, தற்போது வின்ஸ்டோரில் உள்ள அரண்மனையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
68 ஆண்டுகால ஆட்சிக் பொறுப்பில், நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் அவர் உரையாற்ற உள்ளார். 1991ல் முதல் வளைகுடா போர் , 1997ல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணம், 2002ஆம் ஆண்டு அவரது தாயின் மரணம், ஆகிய சந்தர்ப்பங்களில் மட்டுமே இரண்டாம் எலிசபெத் மஹாராணி இதுவரை உரையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love