157
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த ஐந்தாவது நபர் இவராவார். இவர் அண்மையில் இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றய மாலைநேர தகவல்களின்படி இலங்கையில் 159பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love