197
மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #மன்னார் #ஊரடங்கு #கைது
Spread the love