உலகம் பிரதான செய்திகள்

சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை கடந்தது பிரித்தானியா – கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு 684 – மொத்த எண்ணிக்கை 3645…


பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3,645 ஆக அதிகரிதுள்ளது. இது சீனாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விஞ்சியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 38,168 ஆக உயர்ந்துள்ளன – நேற்றைய மொத்தம் எண்ணிக்கை 33,718 இலிருந்தது. இது 4,450 ஆல் அதிகரித்துள்ளது.

கொவிட் -19 தொற்று குறித்த நேர் மறை பாரஜசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 17 சதவீதம் அதிகரித்து வருகிறது – எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்தப் பரிசோதனை எண்ணிக்கை மிகக் குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து இன்று மஹாராணியார் பதிவு செய்துள்ள ஒரு சிறப்பு ஒளிபரப்பை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியில் பிரித்தானியா ஆழமாக மூழ்கியுள்ளதன் விளைவே மஹாராணியாரின் உரை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.