“துருகியின் தெருக்களில் அவளின் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன”
க்ரூப் யோரம் இசைக் குழுவின் (Grup Yorum music band) பாடகரும் முக்கியஸ்தருமான, ஹெலின் பெலெக் (Helin Bölek )உண்ணாவிரதத்தின் 288வது நாளில் மரணித்தார். “288 நாட்களாக தொடர்ந்த சாகும் வரை உண்ணாவிரதத்தில் க்ரூப் யோரம் உறுப்பினர் ஹெலின் பெலெக் தியாகியாகினார். “எங்கள் தியாகிக்கு வணக்கம் செலுத்தவும், அவரது மரணத்திற்கு எதிர்ப்பை வெளியிடவும், எதிர்ப்பு இல்லத்திற்கு வருமாறு நாங்கள் அனைவரையும் அழைக்கிறோம்” என யோரம் இசைக் குழுவின் ட்விட்டர் செய்தியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் உண்ணாவிரதம் இருந்த க்ரூப் யோரம் உறுப்பினர்கள் பெலெக், கோகெக் (Helin Bölek and İbrahim Gökçek ) ஆகியோர் பலவந்தமாக காவற்துறையால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட க்ரூப் யோரம் உறுப்பினர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களுக்கு எதிரான பிடிவிறாந்துகளை நீக்குவதுடன், அவர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றிவளைப்புகள் , கலாச்சார மையத்திற்குத் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, க்ரூப் யோரம் உறுப்பினர் ஹெலின் பெலெக் மற்றும் இப்ராஹிம் கோகெக் ஆகியோர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தனர்.
“அவளால் இரவில் தூங்க முடியாது, ஏனென்றால் அவளுடைய நரம்பு வீக்கமடைந்து முறிவுகளை அடைகின்றன. அவளுக்கு ஏற்படும் மிகுந்த வேதனையால் அவள் தூக்குவதில்லை. என் மகள் மீண்டும் நாட்டுப்புற பாடல்களைப் பாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் குழந்தை இறப்பதை நான் விரும்பவில்லை. இந்த பிரகாசமான மனிதர்களை மீண்டும் மேடையில் பார்க்க விரும்புகிறீர்களா? எனவே, தயவுசெய்து, என் வார்த்தைகளைக் கேட்கும் அனைவரும்: தயவுசெய்து விரைவாக ஏதாவது செய்யுங்கள்,.” என ஹெலின் பெலக்கின் தாய் அய்கல் பில்கி இறப்புக்கு முன் மன்றாடினார்…
மனித உரிமைகள் சங்கம் (İHD) மற்றும் துருக்கியின் மனித உரிமைகள் அறக்கட்டளை (TİHV) ஆகியவை ஹெலின் பெலெக் காலமானதைப் பற்றி ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
“ஹெலின் பெலன் மரணத்திற்காக நாங்கள் வருந்துகிறோம், மனித உரிமை அமைப்புகளாக எங்களின் செயற்பாடுகள் போதுமானதாக இருக்கவில்லை. ஏற்பட்டு இருக்கும் இந்த இழப்பை எங்களால் தடுக்க முடியவில்லை” என்று İHD மற்றும் TİHV ஆகியவை தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
மார்ச் 29 அன்று துருக்கியின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குற்றவியல் மரணதண்டனை தொடர்பான புதிய சட்டத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிடுகையில், கேள்விக்குரிய கட்டுப்பாடு “கட்டாயத் தலையீட்டை நியாயப்படுத்தும் முயற்சியைக் குறிக்கிறது” என்றும், “இந்த இழப்புக்கு அரசாங்கம் அதன் பாதுகாப்பான பார்வையுடன் அரசியல் பொறுப்புக்கூறல்” வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் “மேலும் இழப்புகளைத் தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிரச்சினையை தீர்க்கவும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.”
“வாழ்வதற்கான உரிமை மீறலைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த விடயங்கள் நினைவூட்டுவதாக தெரிவித்த மனித உரிமை அமைப்புகள் அரசாங்கத்தின் எதிர் நிலைப்பட்ட மனநிலையை விரைவில் கைவிட்டு, வாழ்க்கை மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என்றும் நிறுவனங்கள் தங்கள் அறிக்கையில் கோரி உள்ளன.
இஸ்தான்புல்லின் ஒக்மெய்தானில் உள்ள எடில் கலாச்சார மையம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 தடவைகளுக்கு மேலாக காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டது. சோதனையின்போது, க்ரூப் யோரம் உறுப்பினர்களின் இசைக் கருவிகள் உடைக்கப்பட்டன அல்லது காணாமல் போயின, அவர்களின் இசை புத்தகங்களும் சேதமடைந்தன. இக்குழு அளித்த அறிக்கையின்படி, இந்த சோதனைகளில் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். குழுவின் ஏழு உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்பட பிடியானை பிறப்பிக்கப்பட்டள்ளது. இந்த நிலையில்
* தங்கள் கலாசார மையம் தொடர்ச்சியாக சோதனையிடப்படுவதையும், பயங்கரவாதிகளாக மாற்ற முயற்சிக்கப்படுவதற்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இடிலும் கலாச்சார மையத்திற்கு எதிரான காவற்துறை சோதனைகளை முடிவுக்குக் கொண்டுவருங்கள்
* துருகிகிய அமைச்சின் தேடப்படும் பட்டியலில் இருந்து க்ரூப் யோரம் உறுப்பினர்களை அகற்றவும்
* மூன்று ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ள க்ரூப் யோரமின் இசை நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்குங்கள்,
* க்ரூப் யோரம் உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை கைவிடுங்கள்
* கைது செய்யப்பட்ட அனைத்து க்ரூப் யோரம் உறுப்பினர்களையும் (EMK / SD) விடுவிக்கவும்
என்ற கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த க்ரூப் யோரம் உறுப்பினர்கள் இருவரில் ஒருவரான ஹெலின் பெலெக் துருக்கிய அரசின் பாசிசத்திற்கு பலியானார்.