7ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான பிரித்தானியர்கள் மரணிப்பதற்கான ஏதுக்கள் இருப்பதாக Professor Neil Ferguson கணிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் தொற்றுநோயியல் நிபுணரும் நுண் உயிரியல் பேராசிரியரும், அரசாங்கத்தின் முக்கிய ஆலோசகருமான (Professor Neil Ferguson பிரித்தானியாவில் கோவிட் -19 காரணமாக ‘20, 000க்கும் அல்லது அதற்கும் குறைவான ’மக்கள் மரணிப்பார்கள் எனவும், எனினும் தொற்று நோய்களின் பாதையையும், பரவுகையையும் கணிப்பது மிகக் கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பிரித்தானியாவில் கோவிட் -19 காரணமாக இதுவரை 4,313 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் BBC’s Andrew Marr showவில் பிரித்தானிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் கேட்டதற்கு பதில் அளித்த Professor Neil Ferguson “கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தையும் கட்டுப்படுத்தலையும் பொறுத்தே பிரித்தானிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் எனக் குறிப்பிட முடியும் எனக் கூறியுள்ளார்.”
இதேவேளை சமூகரீதியான தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு திகதி குறித்து பதில் அளிக்க மறுத்த பேராசிரியர், பொருத்தமான நேரத்தில், மாற்று ஏற்பாடுகளுடன் கூடிய நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், வெகுஜன சோதனை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும் எனவும் (Professor Neil Ferguson) தெரிவித்துள்ளார்.