A tiger pictured at Bronx Zoo in 2017
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவின் பராமரிப்பாளர் ஒருவரிடம் இருந்து, புலிக்கு கொரோனா பரவியுள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பெண் புலிக்கு மட்டுமல்லாமல், அதே பூங்காவில் இருக்கும் சில ஆப்ரிக்க சிங்கங்களும் வறட்டு இருமலால் அவதிப்படுவதாகவும், கூடிய விரைவில் அனைத்து விலங்குகளும் குணமடைவார்கள் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவுவது அரிதாகவே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புலியும் கொரோனா தொற்றுக்கு உள்ளானது…
176
Spread the love