அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,618 ஆக உள்ளது.
உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயோர்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நான்காயிரத்தை எட்டியதுள்ளதுடன் நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியுள்ளது
இதேபோல் நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களிலும்; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நியூயோர்க்கில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முதன்முறையாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #அமெரிக்கா #உயிரிழப்பு #நியூயோர்க் #கொரோனா