158
பிரித்தானியாவின் அமைச்சரவை அமைச்சர் மைக்கேல் கோவ் (Michael Gove) தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின், தற்போது சுயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். எனினும் கோவ் இற்கு எந்த அறிகுறிகளும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டிலிருந்து கலையகத்திற்கு செல்வதற்குப் பதிலாக வீட்டில் இருந்தவாறே நாளாந்த செய்திகளை கோவ் வெளியிட்டுள்ளார்.
Spread the love