dailymail
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி 854 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து பிரித்தானியாவின் மொத்த மரணங்கள் 6,227 ஆக அதிகரித்துள்ளது. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 96 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இங்கிலாந்தில் மரணித்தவர்கள் 23 முதல் 102 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களில் 29 பேர் – 23 முதல் 99 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கும் சுகாதரத் தகவல்கள் இவர்களின் அடிப்படை சுகாதார நிலைமைகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில் நேற்றய தினம் பதிவான 437 பேரின் மரண எண்ணிக்கையில் இருந்து ஏறத்தாள இன்றைய எண்ணிக்கை இரு மடங்காகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொற்றுநோய்க்கு எதிரான போரில் பிரித்தானியாவுக்கு ஒரு புதிய சவாலையும் இறக்த்தையும் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், எதிர் வரும் வாரங்களில், பரவுகையும், மரணங்களும் உச்சமடையலாம் எனவும், குறிப்பாக ஈஸ்டரை அண்மித்த, ஏழு நாட்கள் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளனர்.