பிரபல சிரேஸ்ட்ட இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜித்து என்ற ஜிதேந்திர ரத்தோட் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானார். கோவிட் -19 க்கு நேர்மறையான பரிசோதனையின் பின் கொரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் மரணித்துள்ளார்.
62 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிதேந்திர ரத்தோட் கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானதாக வேல்ஸ் சுகாதாரப் பிரிவு உறுதிப்படுத்தியது.
இந்தியாவின் மும்பை பல்கலைக்கழகத்தில் 1977 ல் மருத்துவத்துறையில் பயின்ற ஜிதேந்திர ரத்தோட் பின்னர் பிரிதானியாவுக்கு சென்று 4 வருடங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றினார். சிறிதுகாலம் பிரித்தானியாவுக்கு வெளியில் UHWவ்ல் பணியாற்றி மீண்டும் நாடுதிரும்பி 1990களில் இருந்து கார்டிஃப் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக கார்டியோ-தொரசிக் அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றினார்.
“அவர் மிகச் சிறந்த அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர், அவர் தனது நோயாளிகளை ஆழமாக கவனித்துக்கொண்டார்,” அவர் நன்கு விரும்பப்பட்டார் மற்றும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார். அவர் மிகவும் இரக்கமுள்ளவர், அற்புதமான மனிதர். அவரது சிறந்த அர்ப்பணிப்பு முன்மாதிரியாக இருந்தது. நாங்கள் அவரை பெரிதும் இழப்போம்.” என வேல்ஸ் சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.