இலங்கையில் மற்றுமொரு கொரானா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 42 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இருமல், தடிமன் மற்றும் சுவாசப் பிரச்சினை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான நோய் குணங்குறிகள் காணப்படுமாயின் 1390 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.