Home இலங்கையாழில் தங்கியிருந்த தமிழக குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் தங்கியிருந்த தமிழக குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று  காவல்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று  காவல்துறையினர்  மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பத் தலைவர் இணுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது . #யாழ்ப்பாணம்  #தமிழகம் #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More