140
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் 717 பேர் பலியாகி உள்ளனர். இன்றய இறப்புகளுடன் இதுவரை 11,329 பேர் பலியாகி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இழப்புகளில், 17 வயதில் இருந்து 98 வரையிலானவர்களுடன், 40 வயதுடையவர்களும் இறந்துள்ளதாக தேசிய சுகாதார சேவைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்கு வேறு மருத்துவவப் பிரச்சனைகள் இருந்ததாக அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் இனம் காணப்பட்ட +4,342 புதிய தொற்றாளர்களுடன் சேர்த்து பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,621 ஆக உயர்ந்துள்ளது.
Spread the love