டென்மார்க்கில் அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தும் வகையில், முதல் கட்டமாக அந்நாட்டின் பாலர் பாடசாலைகள் மற்றும் தொடக்க நிலை பாடசாலைகள் இன்று திறக்கப்படுள்ளன. புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடிய விரைவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் முதல்தடவையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த டென்மார்க்கில், தற்போது தொற்று பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பாடசாலைகளைத் திறந்த முதலாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் விளங்குகிறது.