பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொறு காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 861 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மருத்துவமனைகளில் 740 பேர் பலியாகி உள்ளதாக NHS தெரிவித்துள்ளது. மேலும் வேல்ஸில் 32 இறப்புகளும், வட அயர்லாந்தில் 18 இறப்புகளும் ஸ்கொட்லாந்தில் 80 இறப்புக்களும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன் பிரித்தானியாவில் மொத்தம் 13, 729 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஈஸ்டர் வார இறுதியில் முடக்கநிலையை கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, கொரோனா வைரஸால் தொற்றால் இறப்பு அதிகரிப்பு ஏற்படும் என தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #பிரித்தானியா #பலி #கொரோனா