152
பிரித்தானியாவில் பூட்டுதல் (lockdown) மே 7 வரை தொடரும் என்று வெளியுறவு செயலாளரர் டொமினிக் ராப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இன்று அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர்களான SAGE மற்றும் கோப்ரா அவசரக் குழுவைச் சந்தித்த பின்னர், வெளியுறவு செயலாளர் இவ்வாறு பூட்டுதல் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பிரித்தானியா ஒரு ‘குறிப்பிடத்தக்க அளவிலான சமூக இடைவெளியை’ கடைப்பிடிக்க வேண்டும் என ஒரு உயர் விஞ்ஞானி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #பூட்டுதல் #lockdown
Spread the love