மிருசுவில் கொலைக் குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்த தீர்மானத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்த சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மகஜரில் கையொப்பமிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அவர் புரிந்த குற்றம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைய பாரதூரமானது என சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனால், மரண தண்டனை குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்த தீர்மானத்தை உடனடியாக மீளப்பெறுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அந்த மஜகரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.