Home உலகம் பிரித்தானியாவில் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 888 பேர் பலி – மொத்த பலி  எண்ணிக்கை 15,464 ஆகியது…

 பிரித்தானியாவில் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 888 பேர் பலி – மொத்த பலி  எண்ணிக்கை 15,464 ஆகியது…

by admin

கொரோனா வைரஸ் தொற்றினால்,  பிரித்தானியாவில்  கடந்த 24 மணித்தியாலத்தில்,  888 பேர் மரணமாகி உள்ளதாக நாட்டின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய அதிகரிப்புடன், கொரோனா  பரவுகையின் ஆரம்பித்ததில் இருந்து, பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 15,464 ஆக அதிகரித்துள்ளது, சீனாவில் பரவத் தொடங்கிய  வைரஸ் தாக்கத்தினால், உலக  நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையில்  ஐந்தாவது இடத்தில் பிரித்தானியா விளங்குகிறது.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோய்க்கான சோதனைகளின் எண்ணிக்கை இதுவரை  460,437 ஆக உயர்ந்துள்ளது, எனினும்  இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படுட்டுள்ளனர். தற்போது பிரிட்டனில் 114,217 நேர்மறை சோதனைகள்  இடம்பெற்றுள்ளன.

இதே வேளை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின்  சுகாதார அதிகாரிகளும் தமது  தினசரி புள்ளிவிவரங்களை பதிவு செய்கிறார்கள், நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தங்கள் எண்ணிக்கையை இணைத்துக்கொள்வதால், சில வேளைகளில் அரசாங்கத்தின் மொத்த எண்ணிக்கையுடன் இது  பொருந்தாதமலும் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More