கொள்ளை நோய் அது கொரோனா.
கொடிய நோய் அது கொரோனா.
கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கும்,
கொடுமை நோய் அது கொரோனா.
கொஞ்சம் கூட இரக்கமின்றி,
இருப்பார் இல்லார் நிலையறியா,
கொன்று குவிக்கும்
இன்றைய நோய் அது கொரோனா.
அனர்த்தம் பல கண்ட உலகம்,
அடங்கிக்கிடக்க செய்த நோய் அது கொரோனா.
அச்சம் அடைந்த போதும், அல்லும் பகலும்,
அவதிப்படுத்திய நோய் அது கொரோனா.
அணுவளவும் திணிவின்றி, அணுகுண்டை விட
ஆபத்தான நோய் அது கொரோனா.
அண்டசராசரமும் அடிமையாகும்படி,
ஆக்கிரமித்த நோய் அது கொரோனா.
காலனை விரட்டி, அவன் கடமை
சுருக்க வைத்த நோய் அது கொரோனா.
காலங்காலமாய் கைக்கொண்ட கைமருந்துகளை,
கைக்கொள்ள வைத்த நோய் அது கொரோனா.
வரம்பெற்ற வல்லரசுகளையும்,
வளைய வைத்த நோய் அது கொரோனா.
வார்த்தைகளால் சொல்ல இயலா
வன்மம் கொண்ட நோய் அது கொரோனா.
முடக்கம் என்பதை மொழிய,
முன்வந்த நோய் அது கொரோனா.
ஈரேழு நாளைக்குள் முற்றிலும் பரவிடும்
இரக்கமில்லா நோய் அது கொரோனா.
சுத்தம் சுகம் தரும் என்பதை
நித்தம் நினைக்கச் செய்த
நோய் அது கொரோனா.
முழுஉலகமும் முழுமையாக
முடியும் முன்னம்
முயற்சியை முன்னிறத்தி,
முடியவைப்போம்(உன்னை) கொரோனா.
கி.விஜிதா,
இராண்டாம் வருடம்,
கலைக்கலாசாரப்பீடம்,
கிழக்கப்பல்கலைகழகம்.