அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ், மனித பேரழிவை ஏற்படுத்தி வருவதுடன் மக்களை வீடுகளுக்குள் முடக்கி, கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் தாக்கம் முடிந்த பின்னரும் பொருளாதாரத்தினை சீர்செய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஒவ்வொரு நாட்டுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுமார் 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #அமெரிக்கா #குடியேற #தடை #கொரோனா