168
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 763 பேர் பலியாகியுள்ளதாக தேசிய சுகாதாரசேவை குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய இறப்புகளுடன் பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 18,100 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 4,451 பேர் புதிய தொற்றாளர்களாக இனம்காணப்பட்டு உள்ளனர். இவர்களுடன் பிரித்தானியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133,495 ஆக உயர்ந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #பிரித்தானியா #சுகாதாரசேவை
Spread the love